கொலு முடிந்தவுடன் செய்ய வேண்டியவை
கொலு முடிவடைந்த மறுநாளே எல்லாப் பொம்மைகளையும் எடுத்து விடாமல் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்தால் நமக்கும் ஓய்வு கிட்டும். நவராத்திரியின் போது வர முடியாத சில விருந்தினர்களும் வந்து பார்க்க வசதியாக இருக்கும். எடுத்து வைக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடுத்த முறை எளிதாக கொலு வைக்க முடியும்.
அதாவது பொம்மைகளை மண் பொம்மை, பீங்கான பொம்மை, பேப்பர் மேஷ் என்று ரகம் வாரியாகப் பிரித்து வத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பழைய நாளிதழ்கள் கொண்டு கவனமாகச் சுற்ற வேண்டும். துணியால சுற்றினால் எலி வந்தது கடிக்கும் வாய்ப்பு உள்ளது. பின்பு அவற்றை அட்டைப் பெட்டியில் அடுக்க வேணடும். தேவைப்ப்பட்டால் இந்த அட்டை பெட்டிக்குள் பேப்பர் கட்டிங் துகள்களையும் இட்டு நிரப்பி பொம்மைகள் உடையாமல் பார்த்துக் கொள்ளலாம். அட்டை பெட்டியின் வெளியில் ஒரு மார்க்கர் பேனா கொண்டு உள்ளே என்னென்ன பொம்மைகள் வைத்திருக்கின்றோம் என்று எழுதி வைத்து விடுதல் வசதியாக இருக்கும். ஸ்லாடட் கொலுப் படிகளை கழட்டும் முன்னர் எந்த படி எந்த ஆங்கிளில் எத்தனையாவது ஸ்லாட்டில் பொருத்தப்பட்டுள்ளது என்று மார்க்கர் பேனாவில் குறித்து வைக்க, அடுத்த முறை படிகள் கட்டுவது எளிதாகும்.
வருடா வருடம் புதுப் பொம்மைகள் வாங்குபவராக இருந்தால் வீட்டில் பொம்மைகள் எக்கச்சக்கமாக சேர்ந்து ஒரு நேரத்தில் கையாளுவது கடினமாக இருக்கும். எனவே வருடா வருடம் ஒரு சில பொம்மைகளையாவது வசதியற்ற ஏழைக் குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கலாம்.
- நிறைந்தது
- சிமுலேஷன்
0 comments:
Post a Comment