1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில்
சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்? அவருக்கு வந்த சில
கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா?;-
2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?
3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்று
சொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?
5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?
6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?
7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அது
எப்படி வந்தது?
8. தேவகுசுமம் என்பது என்ன?
9. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?
(மரத்தடியில் ஏற்கெனெவே நான் பிரசுரித்த மேற்காணும் கேள்விகளை எனது இந்தப் பதிவில் மீண்டும் பிரசுரம் செய்கின்றேன்)
Friday, February 17, 2006
விடையவன் விடைகள்
6:26 PM
3 comments
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
1..ki.va.jaga nadhan
9..no
1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில்
சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்?
விடையவன் விடைகள் - பதிலளித்து வந்தவர் திரு.கி.வா.ஜகன்னாதன்.
2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?
கொய்யாக் கனி பிரேசில் நாட்டிலிருந்து வந்தது. அங்கே அதனை
Guayaha என்று வழங்குவார்கள். அதுவே திரிந்து கொய்யாக் கனியாயிற்று.
3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்று சொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
ராவுத்தன் என்பது குதிரை வீரன் என்ற பொருளுடையது. அது ரவுத் என்னும் உருதுச் சொல்லிலிருந்து வந்தது. டாக்டர் ஐயரவர்கள் "ராவுத்தர்" என்ற
கட்டுரையில் இந்தச் சொல்லைப் பற்றிய ஆராய்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்கள்.
4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?
அது உருதுச் சொல்லிலிருந்து வந்தது.
5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?
சையத் அப்துல் காதர் என்பது அவர் இயற்பெயர். அதுவே சீதக்காதி ஆயிற்று.
6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?
செங்கல்வம் என்பது செங்கழுனீர். திருத்தணிகையில் ஒரு பொய்கையில்
மூன்று செங்கழுனீர் மலர்ந்ததனால் அதற்கு செங்கல்வகிரி என்று பெயர். அங்கே எழுந்தருளியிருக்கும் முருகனுக்குச் செங்கல்வராயன் என்றூ பெயர்.
7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அது
எப்படி வந்தது?
உமா மகேஸ்வரன் என்பதே அவ்வாறு வந்ததென்று காஞ்சி காமகோடி
பீடாபதி ஸ்ரீ சங்கராரிய சுவாமிகள் அருளியிருக்கிறார்.
8. தேவகுசுமம் என்பது என்ன?
கிராம்புக்குப் பெயர்
9. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?
வட சொல்
அன்புள்ள சிமுலேஷன்
மரத்தடியில் உங்கள் படைப்புக்களைப் படித்து வருகிறேன். இன்று உங்கள் அமுத சுரபி கதை படிக்க உங்கள் பதிவுக்கு வந்தேன். அப்பொது இந்த விடையவன் கேள்விபதில் கண்டேன்.
7. உம்மாச்சி பற்றி எழுதி யிருந்தீர்கள்.. யாரோ எனக்கு அது உமை ஆச்சி என்பதில் இருந்து வந்தது என்று சொல்லியிருந்தார்கள். பெரியவர் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று படுகிறது.
பூச்சாண்டி என்பதும் விபூதி பூசும் ஆண்டியான சிவனைக்குறிக்கிற்து என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
அன்புடன் விச்சு
neyvelivichu.blogspot.com
Post a Comment