Sunday, July 31, 2011

ஃபலூடா பக்கங்கள்-03

இந்த வாரம் நிறையக் கேள்விகள் மனதில் தோன்றிவிட்டன. ஃபலூடா பக்கங்க்களைப் படிக்கும் யாராவது பதிலளித்தால் தேவலை தமிழ்நாட்டுப் ப்ளாட்டினம் என்ன ஆச்சு? கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு, "ஜியாக்ரபிகல் ஸர்வே ஆஃப் இண்டியா" அமைப்பு தனது ஆய்வுகளின் முடிவில், தமிழ்நாட்டில் கோவை மேட்டுப்பாளையத்திலும், மற்றும் நாமக்கல்லிலும் தங்கத்தினையும் விட விலை அதிகமான உலோகமான பிளாட்டினப் படிவுகள் எக்கச்சக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்களே! அது என்ன ஆச்சு?...

Tuesday, July 19, 2011

அபூர்வ ராகங்கள் அமெரிக்க வானோலியில்

நண்பர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா (ஸ்ரீ ஸ்ரீ) அமெரிக்காவில் ஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள தமிழர்களிடையே பிரபலமானவர். இட்ஸ்டிஃப் (Itsdiff) என்ற ரேடியோ ப்ரோக்ராமை வாராவாரம் புதன்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை நடத்துபவர். ஸ்ரீ ஸ்ரீயும் நானும் சேர்ந்து இன்று "தமிழ்த் திரையிசையில் அபூர்வ ராகங்கள்" என்ற நிகழ்ச்சியினை நடத்துகின்றோம். விபரங்கள் வருமாறு:- July 9th 7. 30 am PST (8 PM IST) Very special programAboorva Raagangal in Tamil Film Music -Live(இந்திய நேரப்படி புதன் இரவு – 8:00 )Tamizh Radio - http://www.tamizhradio.com/ visit...

Saturday, July 16, 2011

பாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்

ம.வே.சிவக்குமாரின் புகழ்பெற்ற படைப்புக்களில் "வேடந்தாங்கல்", "அப்பாவும் சில ரிக்ஷாக்காரர்களும்", "வாத்யார்" போன்றவை புகழ் பெற்றவை.  வாத்யார் பற்றி ஏற்கெனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதே வரிசையில் இடம் பெற்ற இன்னமொரு கதை "பாப்கார்ன் கனவுகள்". வேடந்தாங்கலைப் போலவே இதுவும் ஒரு நல்ல தலைப்பு. பாப்கார்ன் எங்கு சாப்பிடுவோம்? சினிமாத் தியேட்டர்களில்தானே? ஆம். இக்கதை "கனவுத் தொழிற்சாலையான" சினிமா உலகைக் களமாகக்...

Thursday, July 14, 2011

இந்திய இசை மற்றும் நடனம் - குறுக்கெழுத்துப் புதிர்

"சமுத்ரா" ஜூன் மாத  இதழில் வெளியான இந்திய இசை மற்றும் நடனம்" குறித்தான எனது குறுக்கெழுத்துப் புதிர். - சிமுலே...

ஃபலூடா பக்கங்கள்-02

காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜயந்தி நடராஜன் மத்திய அமைச்சாராகிவிட்டார். மிகவும் நல்ல விஷயம். இனிமேல் செய்தித் தொடர்பாளர் என்ற பெயரில் டி.வி.விவாதங்களில் கலந்து கொண்டு வழ,வழ,கொழ,கொழவென்று பேசி எரிச்சல் மூட்ட மாட்டார் என்று நம்புவோம். பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், டிவி விவாதங்களில், கலந்து கொண்டு, காரசாரமாகவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் விவாதம் செய்பவர்.  தமிழகத்தைச் சார்ந்த நிர்மலா சீத்தாராமனின் கணவர்,...

Sunday, July 03, 2011

அபூர்வ ராகங்கள்-07 - ரதிபதிப்ரியா - Rathipathipriya

ரதிபதிப்ரியா என்ற ராகமானது நடபைரவி ராகத்தின் ஜன்யமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:- ஆரோகணம்:     S R2 G2 P N2 S அவரோகணம்: S N2 P G2 R2 S வெங்கடகிரியப்பா என்பவர் இந்த ராகத்தினை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகின்றது. இந்த ராகம், ஆலாபனை செய்யும் வண்ணம் அமைந்த ஒரு பெரிய ராகமாக இல்லாததால் இன்றும் அபூர்வமாகவே கையாளப்பட்டு வருகின்றது. கனம் கிருஷ்ண ஐயர் இயற்றி, எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய "ஜகஜனனீ" என்ற பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த்த ஒரு முக்கியமான பாடலாகும். அந்தக் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்களில், இந்தப் பாடலைத்...

ஃபலூடா பக்கங்கள்-01

பறவைகளுக்கும் தாகம் உண்டு போட் கிளப் ரோடு அருகே ஆர்ச் பிஷப் மத்தியாஸ் அவின்யூ என்ற நிழற்சாலையில் ஒரு மரத்தினடியில் ப்ளூ கிராஸ் அமைப்பினர் வெயில் காலத்தில் பறவைகளுக்கென்று ஒரு நீர்த் தொட்டி வைத்துள்ளனர். என்ன ஒரு கரிசனமான ஒரு காரியம். தென்னந் தோப்பு தேவதையும் கேட்பரி நிறுவனமும் ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் வரும் "வயலும் வாழ்வும்; நிகழ்ச்சியினை பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். அரிய பல விஷயங்கள் சுவையாக இருக்கும். அதே போலத் தற்போது மக்கள் டி.வியில்...

சில வித்தியாசமான விளம்பரங்கள்-04

சில வித்தியாசமான விளம்பரங்கள்-01 சில வித்தியாசமான விளம்பரங்கள்-02 சில வித்தியாசமான விளம்பரங்கள்-03 - சிமுலேஷ...

Saturday, July 02, 2011

வாக்கிங் செல்லும் வயதானவர்களே! ஜாக்கிரதை!

முந்தாநேற்று, விடியற்காலையில் வாக்கிங் போவது என்று தீர்மானித்து, இரண்டாமவன் அனிருத்தும், நானும் ஆறு மணியளவில் (!) வீட்டைவிட்டு இறங்கினோம். நடக்கத் தொடங்கியவுடன், எதிர் வரிசையில் நடந்து வந்து கொண்டிருந்த வயதான ஒரு தம்பதியினரைப் பார்த்தோம். அந்த வயதான மாமி நல்லபடியாக நடந்து வந்து கொண்டிருந்த போதிலும், மாமா சற்றுத் தயங்கித் தயங்கியே நடந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் அப்படியே சிலை போல நின்று கொண்டிருந்தார். ‘Something wrong, ஏதோ சரில்லை’, என்று பட்சி சொன்னதால், ரோட்டைக் கடந்து, அவர்களிடம் சென்றேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என்றும், தலை சுற்றுகிறதாவென்றும்...

டாக்டர்.ஹெச்.வி.ஹண்டே

சமீபத்தில் Win TVல் ஒரு அரசியல் கலந்துரையாடல் நடை பெற்றுக் கொண்டிருந்தத்து. காரசாரமாக ஒருவர் மத்திய அமைச்சர்களை விளாசிக் கொண்டிருந்தார். யாரென்று கவனித்ததில், எம்ஜியார் அமைச்சரவையில் சுகாதாரத்த துறை அமைச்சராக இருந்த Dr.H.V.Hande அவர்கள். அவர் இத்தனை காலமும் எங்கிருந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. என்னைக் கவர்ந்த  டீசண்டான ஒரு சில அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். ராஜாஜியின் சீடர்களில் ஒருவரான இவர், “மூதறிஞர் ராஜாஜி” என்ற புத்தகமும் எழுதியுள்ளார்....

Friday, July 01, 2011

கண்ணாடிக்கு குட்பை

என் முதல் பையன் ஆதித்யாவுக்கு கண்ணாடி அணிவது என்பது அறவே பிடிக்காது, என்றாலும் வேறு வழியில்லாது வெகு நாட்களாக கண்ணாடி அணிந்து வந்துள்ளான். கண் எக்சர்ஸைஸ் செய்து பவரை  குறைந்தாலும், கண்ணாடி அணிவதை ஒரு போதும் தவிர்க்க முடியவில்லை. ஆனால் சமீப காலமாகத் தனது நண்பர்கள் பலரும் லேசர் ஆபரேஷன் செய்து கொண்டு கண்ணாடி அணிவதனையே விட்டுவிட்டார்கள் என்று சொல்லித் தானும் அப்படிப்பட்ட ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டுமென்று சொல்லி வந்தான். எங்களது வழமையான...