Sunday, December 27, 2015

அறநிலையத் துறை சுற்றறிக்கை

ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த ஆடைக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெற்றியில் திருநீறோ, குங்குமமோ, சந்தனமோ, திருமண்ணோ இட்டுக் கொள்வது என்பது இந்துப் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளம். எனவே, இந்துக் கோயிலுக்கு...

Saturday, October 24, 2015

என் பெயர் விஸ்மயா - 4 - (குறு நாவல்)

என் பெயர் விஸ்மயா - 1 என் பெயர் விஸ்மயா - 2 என் பெயர் விஸ்மயா - 3 இந்த வருஷம் தீபாவளி ரொம்ப விசேஷம். தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னமே பரத் மாமா குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்திருந்தார். அனதராமனும் தன தம்பி, மச்சினர் எல்லோரையும் தீபாவளிக்கு முதல் நாளே வரச் சொல்லியிருந்தார். ஒவ்வொருவராக வர, வர தீபாவளி களை கட்டத் தொடங்கி விட்டது. "குரு, என்ன இருந்தாலும் தீபாவளி மாதிரி எந்தப் பண்டிகையும் வராதுரா. நாமெல்லாம் சின்னப் பசங்களா இருந்தப்போ, ஒரு வாரத்துக்கு முன்னாடியே தீபாவளி ஜொரெல்லாம் வந்துரும். இப்பப் பாரு,...

என் பெயர் விஸ்மயா - 3 - (குறு நாவல்)

என் பெயர் விஸ்மயா - 1 என் பெயர் விஸ்மயா - 2 சித்தப்பா, சித்தி, மாமா, மாமி எல்லோரும் ஒரே நேரத்தில் வீட்டிற்கு வருவது அபூர்வம். அதுவும் ஞாயிற்றுக் கிழமை மாலையில் டி.வி. படங்களைப் பார்க்காமல் வந்திருக்கிறார்கள் என்றால் ஏதோ விசேஷம் கண்டிப்பாக இருக்கும். "வசு, ரவி என்னமோ எங்களையெல்லாம் வரச் சொல்லியிருக்கான். ஆனா, அவனைக் காணோமே! எங்கே போயிட்டான்?" "சித்தப்பா. இப்பத்தான் ரவி போன்பண்ணினான். இன்னமும் பத்து நிமிஷத்லே வீட்லே இருப்பேன்ன்னுட்டு" "எங்கே அவன் பைக் வாசல்லே தான் இருக்கு. பஸ்லே எல்லாம் போக மாட்டாரே நம்ம மாப்ள!" ஒவ்வொருவராக...

என் பெயர் விஸ்மயா - 2 - (குறு நாவல்)

என் பெயர் விஸ்மயா - 1 அனந்துவுக்குப் புதுமையாக ஏதாவது பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும். இப்போது என்ன யோசனையென்றால் 10ஆம் தேதி வருகின்ற தன்னுடைய பிறந்தநாளுக்கு எதுவும் வாங்கிக் கொள்ளாமல், வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஏதாவது வித்தியாசமாக வாங்கிக் கொடுத்தால் என்ன? வசுமதிக்கு ஒரு பெங்கால் காட்டன் புடவை. ரவிக்கு ஒரு கிரிக்கெட் பேட். பாவம் ரொம்ப நாளா ஒரு சொத்த பேட்தான் வைத்துக் கொண்டிருக்கிறான். அப்பாவுக்கு ராசியிலே ஒரு ஜிப்பா. அமாவுக்கு ஒரு ரங்காச்சாரி புடவை. விஸ்மயாவுக்கு என்ன ட்ரெஸ்? நோ...நோ... இந்த முறை ட்ரெஸ் வெண்டாம். வித்தியாசமா ஏதாவது! ...கேமிரா?.......