Monday, August 22, 2005

அஸ்ஸாம் அனுபவங்கள்

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஏழு சகோதரிகளில் மூத்தவள்தான் அஸ்ஸாம். கௌஹாத்தியிலிருந்து கோலாகாட் செல்லும் வழியில் நுமாலிகார் எண்ணை சுத்திகரிப்பு ஆலை உள்ளது. அனைத்து அஸ்ஸாம் மாண்வர்கள் சங்கமும் (AASU), ராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்ததின் அடிப்படையில் உருவானதால் "ஒப்பந்த ஆலை" (Accord Refinery) என்ற பெயருமுண்டு இதற்கு. பார் புகழும் பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேஷனின் கூட்டு முயற்சிதான் இந்த நிறுவனம். இங்குதான் எங்களுக்கு ப்ரோஜெக்ட். ஹரியும் நானும் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு 'ஜெட்'டில் பயணித்து, பின்னர் அங்கிருந்து "இண்டியன் ஏர்" பிடித்து,...

அறிவுரை

"எங்கடா, இந்த செல்வனைக் காணலை. இன்னிக்கும் லீவா" "ஆமா ஸார். ஊருக்கு போயிருக்கானாம்." எனக்குப் பலத்த கோபம் வந்தது. இது முதல் முறையல்ல. வெள்ளிக்கிழமை லீவு எடுப்பது இது மூணாவது முறை. வெள்ளி, சனி, ஞாயிறு என்று லீவு எடுக்க இவனுக்கு என்ன ராஜா வீட்டுக் கன்னுக் குட்டின்னு நினைப்பா?. "குமார். நீதானப்பா, அந்த செல்வனை வேலைக்குச் சேர்த்து விட்டது. அவன் எங்க இருக்கான்?" "ஸார். இங்கதான் மல்லிப்பூ நகர்ல.." "என்னாச்சு அவனுக்கு? ஏன் வேலைக்கு வரலை?" "என்னமோ, வீட்ல சண்டையாம். காஞ்சீபுரம் போய்ட்டானாம்." "சரி. சரி. வரட்டும் திங்கக் கெழம. நான் பாத்துக்கறேன்" திங்கட்...

மொழிப் பிரச்னை

மொழிப் பிரச்னை என்றவுடன் ஏதோ, தனித்தமிழ் என்றோ, வழலைக்கட்டி போன்ற கனமான விஷயங்கள் பற்றியோ பேசப் போகிறேன் என்றெண்ணி பயந்து விடாதீர்கள். இது சும்மா நம்ம அனுபவங்கள்தான். ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை மொழிகள் தெரிகின்றதோ அத்தனை நல்லது என்று தெரிந்திருந்தும், எப்படியோ மற்ற மொழிகள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லாமலே, ஒரு ஜென்மம் வளர்ந்து விட்டேன். இதனால் எத்தனையோ சங்கடங்கள் வந்த போதிலும், நினைவலைகளைப் புரட்டிப் பார்க்கின், சுவாரசியமாய் சில விஷயங்கள் புலப்படத்தான் செய்கின்றது. தாய் மொழியாம் தமிழும், ஆண்டவர்கள் மொழியாம் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த எனக்கு,...

Sunday, August 21, 2005

இன்ஸ்பெக்டர் வர்றாருங்கோ

அந்தக் காலத்தில், பள்ளிக்கூட இன்ஸ்பெக்ஷன் என்பது மாணவர்களுக்கு தீபாவளிக்கு அடுத்தபடியான ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். ஆசிரியர்களுக்கும் கூட. ஒரே வித்தியாசம் அவர்கள் பிதறலை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். மற்றபடி பள்ளிக்கூடத்தில் உள்ள அனைவரும் எக்சைட் ஆகி, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திமிலோகப்படும் நேரமது. இன்ஸ்பெக்ஷன் தொடங்க ஒரு வாரம் முன்னரே, பள்ளி களை கட்டி விடும். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை அடிக்கப்படும். அடுப்புக்கரி, ஊமத்தை இலை கொண்டு அரைக்கப்படும் கரும்பலகைக்குண்டான வர்ணக்கலவை (கரி), கரும்பலகையில் பூசப்படும். இந்த...

இரத்த தானம்

"ஸார். சீக்கிரம் கிளம்புங்க. கேப் ஏற்பாடு பண்ணிருக்காங்க பர்ஸ்ட் எய்ட் சென்டெரிலேர்ந்து." அவசரமாக உடை மாற்றிக் கொண்டு வந்து ஏறினேன் அந்த அம்பாசடர் காரில். ஏற்கெனவே காரில் மூன்று AB+ உட்கார்ந்திருந்தனர். கார் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிட்டலை நோக்கி விரைந்தது. பவர் பிளான்ட்டில் வேலை செய்து கொண்டிருந்த முருகேசனுக்கு ஆக்சிடெட்டாம். வெல்டிக் செய்து கொண்டிருந்த மணுசன், கால் தவறி கான்டென்சேட் டாங்கில் விழுந்து விட்டானாம். அவனுக்கு இரத்த தானம் செய்யவே இப்போது சென்று கொண்டிருக்கின்றோம். இப்போதுதான் வாழ்க்கையில் முதல் முறையாக இரத்த தானம் செய்கின்றேன். என்னுடைய...

Saturday, August 20, 2005

ஸ்ரீராம நவமிக் கச்சேரி

"ஸார், ஆதித்யா ரொம்ப நன்னா பாடறான். அவனை இந்தவச சக்கரை அம்மன் கோயி¢லே, ஸ்ரீராம நவமிக் கச்சேரியிலே பாட கேட்டிருக்கா. சரின்னு சொல்லிட்டேன்." என்றார் பாட்டு வாத்யார். ஸ்ரீராம நவமிக் கச்சேரி என்று காதில் விழுந்தவுடன், நினைவு முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஓடத் தொடங்கியது. அப்பா ஒரு பன்முகத்திறன் கொண்டவர். தமிழ்ச் சங்கம், இஸ்கஸ், ரோட்டரி கிளப் என்று எல்லா ஸோஷியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இருந்தபோதும் அவர் அதிக ஈடுபாடு கொண்டது ஸ்ரீராம நவமிக் கமிட்டியில்தான். அவர்தான் உப தலைவர். எழுபதுகளில் மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீராம நவமிக்...

சூடான் அனுபவங்கள்

 பெரும்பாலும் யாரும் அதிகம் போகாத நாடு ஒன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. ஆம். ஆப்பிரிக்க நாடான சூடான் தான் அது. சூடானின் தலை நகரான கார்ட்டுமில் (Khartum) உள்ள எரிசக்தி மற்றும் சுரங்கத்துறையின் கீழ் வரும் சூடானீஸ் பெட்ரோலியம் கார்பொரேஷனில் இரண்டு மாச அசைன்மெண்ட். சூடான் ஒரு சர்வாதிகார நாடு. தீவிரவாதிகள் உலா வரும் பயங்கர நாடு என்று நண்பர்கள் மாற்றி மாற்றி எச்சரிக்கை. ஆனால் அங்கு போய்ப் பார்த்தால் நம்ம டெல்லி அல்லது ஹைதராபாத் போலத்தான்...

Embarrassment

முன்னொரு காலத்தில் விருப்பப்பட்ட திரைப்படங்களை மட்டும் தியேட்டரில் சென்று பார்ப்போம். ஆனால் தற்போது விரும்பியோ விரும்பாமலோ டிவி மூலம், திரைப்படங்கள் வரவேற்பு அறைக்கு வந்து விடுகின்றது. சில பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. மும்பாயிலுள்ள எனது மாமா மாமிக்கு, கிரிஷ் என்று நாலு வயதில் பையன். மாமா மாமி டிவியில் சினிமா பார்க்கும்போது, கிரிஷ¤ம் கூட இருப்பான். படத்தில் கொஞ்சம் ஏடாகூடமாக சீன் வரும்போது, மாமி, பையனிடம், கிரிஷ் வா, சின்ன பாத்ரூம் போயிட்டு வந்துடலாம், என்று நைஸாக அவனை டிவி இருக்கும் இடத்திலிருந்து அப்புற்றப் படுத்துவது வழக்கம்....

Read Only Memory

Read Only Memory!!! அஞ்சாறு வருஷங்ளுக்கு முன்பு, பொழுது போகவில்லையே; எங்கேயாவது போகலாம் எண்று எண்ணி பேப்பரில் என்கேஜ்மெண்ட் காலத்தைப் பார்த்தேன். சாந்தோம் அருகே உள்ள பெரிய அரங்கத்தில் ஒரு மெமரி நிறுவனம் தனது விளம்பர நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி வித்தியசமாக ஆக இருக்கும் போல உள்ளதே என்று எண்ணி குடும்பத்துடன் சென்றோம்.நினைத்தபடியே நிகழ்ச்சி புதுமையாகத்தான் இருந்தது. முதலில் சிறுமி ஷாமினி வந்து மேஜை மீதிருந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்களை ஓரிரு நிமிடங்களே பார்த்து விட்டு அத்தனை பொருட்கள் பெயரையும் தப்பில்லாமல்...

என்றான் முருகன்

சுஜாதா அவர்கள் விகடனில் "என்றான் முருகன்" என்ற தலைப்பில்வாசகங்கள் எழுதக் கேட்டிருந்தார்.வாத்யார் பிரசுரிக்காமல் விட்டு நான் எழுதிய வாசகங்கள் கீழே வருமாறு:-1. அம்மா மாம்பழம் பிடிக்குமே உங்களுக்கு என்றான் முருகன் கனிவாக.2. பாம்பைப் போன்ற தீவிரவதிகளை விஷம் வைத்துக் கொன்றால் கூடத் தவறில்லை என்றான் முருகன் நச்சென்று.3. டிபன் பாக்ஸி¢ல் மிளகாய் பஜ்ஜியை வைத்தது யார் என்றான் முருகன் காரமாக.4. உனக்காக ஸ்பெஷல் ஐஸ் க்ரீம் வாங்க வந்தி¢ருக்கேன் சாப்பிடு என்றான் முருகன் குழைவாக.5. பில்டர் காபிதான் பெஸ்ட்; இல்லை இல்லை. இன்ஸ்டன்ட் காபிதான் பெஸ்ட் என்றான் முருகன்...