Tuesday, March 30, 2010

சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

"சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?" என்பது உள்ளிட்ட சில கேள்விகள் வைத்திருந்தேன் எனது பதிவில் முன்பொரு முறை. அதனை மீள் பதிவு செய்கின்றேன் இப்போது. எனது பழைய பதிவுகளிலிருந்தோ அல்லது கூகிளாண்டவர் துணைகொண்டோ பதில்களைக் கண்டுபிடித்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். - சிமுலேஷன் 1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்? அவருக்கு வந்த சில கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா?;- 2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது? 3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்று...

Friday, March 19, 2010

ஊஞ்சல் - சுஜாதா - நாடகம் - நூல் விமர்சனம்

சிறுகதைகளிலும், நெடுங்கதைகளிலும் எப்படி தனக்கென்று ஒரு முத்திரை பதித்தாரோ, அப்படியே தமிழ் நாடகங்களிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் சுஜாதா. சமூக அவலங்கள், யதார்த்தம், எள்ளல், நகைச்சுவை, சோகம் என பலதரப்பட்ட விஷயங்களையும் அவர் நாடகங்களில் காணலாம். அவரது நாடகங்களில் முக்கியமான ஒன்று "ஊஞ்சல்" ஆகும். இதே நாடகம் பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை நடிக்கப்பட்டது. இந்த நாடகத்தினைப் படிக்கும்போது, தனக்கு ஒரு நல்ல பாத்திரம் இருப்பதாக நினைத்து பூர்ணம்...

Thursday, March 18, 2010

பாலங்கள் - சிவசங்கரி - நூல் விமர்சனம்

சிவசங்கரி அவர்கள் எழுதிய "பாலங்கள்" நாவலுக்கு என் அம்மா கோவை வானொலியில் வாசித்த சிறு நூல் விமர்சனம். (ஒலிபரப்பானது 1984 ஆம் ஆண்டாக இருக்கலாமென்று நினைக்கின்றேன்). Get this widget | Track details | eSnips Social DNA பதிவர் "ஆர்வி" கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த ஒலிபரப்பின் ட்ரான்ஸ்க்ரிப்ட்டினையும் இங்கு பதிவிடுகின்றேன். - சிமுலே...

Monday, March 15, 2010

யார் எழுத்து? ஒரு புதிர்

தமிழ் எழுத்துக்களை ஆழ்ந்து படிப்பவரா நீங்கள்? உங்களுக்காக ஒரு புதிர். "யார் எழுத்துக்கள் இவை?" என்று கூறுங்கள். ஐந்து விடைகளையும் சரியாகக் கண்டுபிடிக்கிறவர்களே வெற்றி பெற்றவர்கள். 1. "நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்!" என்று மிகச் சிறு வயதிலிருந்தே பிரகடனப்படுத்தத் தொடங்கிவிட்டான் பரசு. அவனுடைய அக்காவும், அண்ணாவும் குழந்தையாயிருந்தபோது சப்பியது கட்டை விரலை; ஆனால் பரசு பாம்பு விரல், மோதிரவிரல் இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக் கொண்டு சப்பினான். அவனுடைய அக்காவும், அண்ணாவும் சற்றே உரக்க அதட்டினால் போதும். விசித்து விசித்து அழத் தொடங்கி...

Sunday, March 14, 2010

போலிச் சாமியாரும் வேண்டாம்; நல்ல சாமியாரும் வேண்டாம்

சமீப காலங்களில் வரும் போலிச்சாமியார்களைக் "குறி" வைத்து வரும் செய்திகளைப் படிக்கும் பலரும், இந்த மாதிரி ஆசாமிகளால், நல்ல சாமியார்களுக்கும் கெட்ட பெயர் என்று சொல்லி வருகின்றனர். நல்ல சாமியார் யார்? போலிச் சாமியார் யார்?" என்று கேட்டால், சுலபமாக "மாட்டிக் கொண்டவர் போலிச்சாமியார்", என்றும் "மாட்டிக் கொள்ளாதவர் நல்ல சாமியார்" என்றும் கூறிவிடலாம். போலியோ, அசலோ, மக்ககள் எதற்காக இவர்கள் பின்னே போகின்றனர்?  மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு சாமியார்கள், பீடாதிபதிகள், ஸ்வாமிஜிக்கள் தீர்வு தருவார்கள் என்றே செல்கின்றார்கள் என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால்...

Saturday, March 13, 2010

தேவை: அம்மா

ஒரு முறை ரெக்கார்டிங்கில் மிக்சிங்கின்போது ஒரு குழந்தை "அம்மா" என்று கத்த வேண்டிய சவுண்ட் எபக்ட் வர வேண்டியிருந்தது. அதுக்காக, ரெக்கர்டிங் ரூமுக்கு வெளியே நின்றிருந்த ஒரு சிறுவனைத் தாஜா பண்ணி, பாடலாம் வா என்று உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார் இசைக் குழுவை சேர்ந்த வைரம். மைக் முன்னாடி அவனை நிற்க வைத்தார். ஸ்க்ரீன் மேலே பாடல் ஓடுகிறது. டேக் ஆரம்பமாகிவிட்டது. குழந்தை கத்தும் காட்சி. மைக் முன்னாடி நின்ற சிறுவன் முதுகில் பளாரென்று ஓர் அடி வைத்தார் வைரம். அவன் 'அம்மா; என்று கத்துவான் என்பது அவர் நினைப்பு. ஆனால், அந்தப் பையன் சடாரென்று திரும்பிக் கெட்ட...

Friday, March 12, 2010

வாய்மையே சில சமயம் வெல்லும் - சுஜாதா - நூல் விமர்சனம்

1984ல் சுஜாதா ஆனந்த விகடனில் "வாய்மையே வெல்லும்" என்று ஒரு தொடர்கதை எழுதினார். அது பின்னர் தூர்தர்ஷனில் சீரியலாக் வரத் தொடங்கியது. யாவரும் நலம் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், தூர்தர்ஷன் டைரக்டர் நடராஜன் சுஜாதவுக்குப் போன் செய்கிறார் அவசரமாக. அந்தச் சீரியலுக்கு சில மாதர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும், எனவே அவர் உடனே நிலையத்திற்கு வர வேண்டுமென்றும் சொல்கிறார். தொடரை உடனே நிறுத்த வேண்டும். இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதமோ...

Thursday, March 11, 2010

ராகசிந்தாமணி கிளப் - ஒத்த ராகங்கள்-03 (Allied Ragas) -ஆரபி, தேவகாந்தாரி

முன்னுரை-01 முன்னுரை-02 "ராமகிருஷ்ணன் சார் ஜிலேபி வங்கிண்டு வந்திருக்கார் பாரு. எல்லாருக்கும் டப்பாவை பாஸ் பண்ணுடீ" "ஆஹா. இது ஒண்னும் ஜிலேபி இல்லையே. ஜாங்கிரின்னா இது. ஆனா என்ன? ரொம்ப நன்னா தேனாட்டம் இருக்கு." "ஜிலேபிக்கும் ஜாங்கிரிக்கும் என்ன வித்தியாசம் மாமா?" "ரெண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். நம்ம ஆரபியும், தேவகாந்தாரியும் போல. ஜிலேபி மைதா மாவுலே செய்யறது. ஜாங்கிரி உளுந்து மாவுலே செய்யறது." "சாப்பாட்டு ராமன்களா. போதும் ஜிலேபி, ஜாங்கிரி...

அலெக்சாந்தரும் ஆறுமுகனும்

"அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்பது வழக்கம். அதே போல "அலெக்சாந்தருக்கும் ஆறுமுகனுக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டால், 'இருக்கு சம்பந்தம்' என்று சொல்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.  சமீபத்தில் நாரதகான சபா மினி அரங்கில் 'நாட்டியரங்கம்' சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடனமணி ஸ்ரீலதா வினோத், "முருகன்" என்ற தலைப்பில் நாட்டியம் குறித்த லெக்-டெம் நிகழ்த்தினார். அப்போது, அலெக்சாந்தருக்கும் ஆருமுகனுக்கும் உள்ள ஒற்றுமைகள்...

Saturday, March 06, 2010

வா... வா... வாடி பொண்ணே

இந்தப் பாட்டு எனது குடும்பத்தில் பலரும் பாடும் பாட்டு. குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். குழந்தைகளைத் தூளியில் போட்டுத் தாலாட்டுப் பாடும்போது பயன்படுத்தும் பாடல். புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு, முதன் முதலாக பேருந்து இயக்கப்பட்டபோது யாரோ அதனைப்பற்றிப் பாடிய பாடலாம். இந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் மேலதிக விபரங்கள் தெரிந்தால் தெரிவிக்கலாம்.  வா...வா...வாடி பொண்ணே வந்திடு மோட்டார் வண்டியிலே போவோம் நாம் பொன்னுரங்கம் போற்றி செய்வாய் எந்தன் கண்ணே                            ...

Friday, March 05, 2010

அவுரங்கசீபும் தமிழ்த்திரட்டிகளும்

அரசர் அவுரங்கசீப் வீணை வாசிப்பதில் வல்லவராம். இருந்தாலும்  அவருக்கு ஏனோ இசை என்றாலே ஆகாது. இசை, நாட்டியம் போன்ற எல்லாவித நுண்கலைகளையும் அவரது ஆட்சிக் காலத்தில் தடை செய்தாராம்.      அதே போல வலைப்பதிவுகளை தங்கள் இணைப்பிலே திரட்டிக் கொள்ளும் தமிழ்திரட்டிகள், இந்தப் பதிவுகளை வகைப்படுத்த நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், சினிமா, தொழில் நுட்பம், கார்ட்டூன், கவிதை, ஆன்மிகம் போன்ற எத்தனை, எத்தனையோ பிரிவுகள் வைத்திருந்தாலும்...

ராகசிந்தாமணி கிளப் - ஒத்த ராகங்கள்-02 (Allied Ragas)

முன்கதை "அத்தே, ஜிஞ்சர் டீ சூப்பர்... மாமா.. பாட்டு நல்லா இருந்தா கேக்கறோம். ரசிக்கறோம். எதுக்காக இந்த ஆராய்ச்சியெல்லாம்? எங்க தலைவர் சொன்னா மாதிரி, அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.என்ன நாஞ்சொல்லறது?" "டேய் ஆதித்யா நீ சொல்றது வாஸ்தவந்தான். எதுவுமே நல்லதா இருந்தா, அனுபவிச்சா மட்டும் போதும். ஆராயத் தேவையில்லை. ஆனா நம்ம மாதிரி கோஷ்டிங்களுக்கு ஆராய்ச்சி பண்ணினா இன்னமும் அனுபவிக்கலாமேன்னு தோணும்.உதாரணத்தோட சொன்னா நல்லாப் புரியும்னு நினைக்கிறேன்." "வசந்தா மாமி,... உங்க வருன், அருண் ரெண்டு பேரும் வந்த்திருக்காங்கல்லியா? அவங்களக் கொஞ்சம் உள்ளே கூப்பிடுங்களேன்." "டேய்...வருண்,...அருண்......

ராகசிந்தாமணி கிளப் - ஒத்த ராகங்கள்-01 (Allied Ragas)

"2010ஆம் ஆண்டு நடக்க இருக்கும் நம்ம 'ராகசிந்தாமணி' கிளப்பின் முதலாவது கூட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் 'வருக்,வருக'வென வரவேற்கின்றேன்." "சிமுலேஷன் அண்ணா. என்னத்துக்கு இப்படியெல்லாம் ஃபார்மலா? வழக்கம் போல இன்ஃபார்மலா நடத்தலாமே?" "கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு, எல்லோரும் இன்னிக்கி மீட் பண்ணறோம். அதான் ஃபார்மலா ஆரம்பிச்சா ஒரு 'கெத்'தா இருக்குமேன்னுதான்." "கண்ணன் சார். முந்தா நேத்திக்கி எஃப்.எம்.கோல்ட்லே 'மாஞ்சி' ராகத்திலே ஒரு RTP கேட்டேன். இவர் என்னடான்னா அது மாஞ்சியே இல்ல. பைரவிதான் அப்படீங்கறார். நானும் மாஞ்சிதான்னு மாய்ஞ்சி. மாய்ஞ்சி...

Thursday, March 04, 2010

அபூர்வ ராகங்கள்-06 - சல்லாபம் (aka) சூர்யா (Sallabam or Surya)

'சல்லாபம்' என்ற ராகம் 'சூர்யா' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ராகம் 14ஆவது மேளகர்த்தா ராகமான 'வகுளாபரணம்' என்ற ராகத்தின் ஜன்ய ராகமாகும்.இதன் ஆரோகணம் அவரோகணம் வருமாறு:- ஆரோகணம்:     S G3 M1 D1 N2 S அவரோகணம்: S N2 D1 M1 G3 S   சல்லாபம் கிட்டத்தட்ட ஹிந்தோளம் என்ற ராகத்தினை ஒத்திருப்பது போலத் தோன்றும். ஆனால் ஹிந்தோளத்தில் சாதாரண காந்தாரம் இடம் பெறுகின்றது. சல்லாபத்திலோ, அந்தர காந்தாரம் இடம் பெறுகின்றது.   முதலாவதாக டாக்டர்.கடம் கார்த்திக் இயற்றிய சல்லாப ராக உருப்படியினைப் பார்ப்போம். கீ போர்ட் சத்யாவும் வாசிக்கின்றார்....

Wednesday, March 03, 2010

சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?. மேட்டுப்பாளையம், கல்லார்

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா?" என்ற பாட்டிற்கேற்ப எல்லோரும் சொந்த ஊர் என்றால் உணர்ச்சி வசப்படுவது இயற்கை. அந்த ஊர் எவ்வளவு குப்பையாக இருந்தாலும், ஊர் அபிமானம் வருவதற்குக் காரணம், நினைவலைகள், ஆட்டோகிராப்ஃப், கொசுவத்தி etc...etc. மேற்கண்ட வகையில் நான் பிறந்து வளர்ந்த மேட்டுப்பாளையத்தின் மேல் எனக்கு ஒரு பாசம் உண்டு. கல்லூரிப் படிப்புகென்று சென்னைக்கு வந்துவிட்டாலும், பள்ளிக் காலம் முழுவதும் இங்கேதான். பள்ளிக் காலங்களில் வார விடுமுறைகளில்...

Tuesday, March 02, 2010

பத்திரமா பார்த்துக்கோங்க

பாலாம்பாள் டீச்சரின் கணவர் பாலு மாமாவுக்கு சூதுவாது தெரியாது. ஒரு முறை டீச்சர் அவரை வீட்டில் விட்டு வெளியே போக வேண்டியிருந்தது. வீட்டு வேலைகள் செய்ய வேண்டிய வேலைக்காரி இன்னமும் வரவில்லை. நல்ல திறமையான வேலை செய்பவளாக இருந்தாலும் கொஞ்சம் கை நீளம். சின்னச் சின்னச் சாமான்களை அவ்வப்போது திருடிக் கொண்டு போய்விடுவாள். டீச்சர் தனது கணவரிடம் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றார். வேலைக்காரியிடம் மறக்காமல் பெட்ரூமையும், ஹாலையும் பெருக்கச் சொல்லுங்கள் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார். பாலு மாமாவுக்கோ வேலைக்காரி வருவதற்கு முன்னாலேயே...

Monday, March 01, 2010

துக்ளக் சோவுக்குச் சில கேள்விகள்

பதின்ம வயதில் பல்வேறு பொழுதுபோக்குகள் இருந்தன. அவற்றில் ஒன்று பத்திரிக்கைகளுக்குக் கேள்விகள், துணுக்குகள் எழுதிப் போடுவது. அதிலும் "துக்ளக்' சோ, குமுதம் அரசு போன்றவர்களுக்கு வில்லங்கமான கேள்விகள் கேட்டு அது பிரசுரம் ஆகின்றதா என்று பார்ப்பது எனக்கும் எனது கஸின் ஹரீஷுக்கும் (தற்போது ஹ்யூஸ்டனில்) ஒரு த்ரில்லான அனுபவம். (அந்தக் காலத்திலும் ஆட்டோ பயம் இருந்தது என்றாலும்). இந்தக் கேள்வி-பதில்கள் படத்துடன் பிரசுரமானால் இரட்டிப்பு சந்தோஷமும் கூட. சில சமயம்...