Thursday, September 29, 2011

கொலு வைப்பது எப்படி?

கடந்த சில நாட்களில் நவராத்திரி கொலு குறித்து ஒன்பது பதிவுகள் இட்டிருந்தேன். அதனைப பற்றிய ஒரு சுருக்கம் இங்கே. முதல் பதிவில் கொலு குறித்த ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்டது. இரண்டாவது பதிவில் கொலுவுக்கு முன்னதாக வாங்க வேண்டியவை குறித்து விளக்கப்ட்டது. மூன்றாம் பதிவில் கொலு வைக்கும் அறையில் செய்ய வேண்டியவைகள் குறித்தும் மற்றைய ஏற்பாடுகள் குறித்தும் கூறப்பட்டது. நான்காம் பதிவில் படி கட்டிக் கொலு வைக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. ஐந்தாம் பதிவில் கொலுவில் பூங்கா, தெப்பக் குளம் போன்றவை செய்து எப்படி மதிப்புக் கூட்டுவது என்று கூறப்பட்டது. ஆறாம்...

கொலு வைப்பது எப்படி? - 09

கொலு முடிந்தவுடன் செய்ய வேண்டியவைகொலு முடிவடைந்த மறுநாளே எல்லாப் பொம்மைகளையும் எடுத்து விடாமல் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்தால் நமக்கும் ஓய்வு கிட்டும். நவராத்திரியின் போது வர முடியாத சில விருந்தினர்களும் வந்து பார்க்க வசதியாக இருக்கும். எடுத்து வைக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடுத்த முறை எளிதாக கொலு வைக்க முடியும்.  அதாவது பொம்மைகளை மண் பொம்மை, பீங்கான பொம்மை, பேப்பர் மேஷ் என்று ரகம் வாரியாகப் பிரித்து வத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பழைய நாளிதழ்கள் கொண்டு கவனமாகச் சுற்ற வேண்டும். துணியால சுற்றினால் எலி வந்தது கடிக்கும்...

கொலு வைப்பது எப்படி? - 09

கொலு முடிந்தவுடன் செய்ய வேண்டியவைகொலு முடிவடைந்த மறுநாளே எல்லாப் பொம்மைகளையும் எடுத்து விடாமல் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்தால் நமக்கும் ஓய்வு கிட்டும். நவராத்திரியின் போது வர முடியாத சில விருந்தினர்களும் வந்து பார்க்க வசதியாக இருக்கும். எடுத்து வைக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடுத்த முறை எளிதாக கொலு வைக்க முடியும்.  அதாவது பொம்மைகளை மண் பொம்மை, பீங்கான பொம்மை, பேப்பர் மேஷ் என்று ரகம் வாரியாகப் பிரித்து வத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பழைய நாளிதழ்கள் கொண்டு கவனமாகச் சுற்ற வேண்டும். துணியால சுற்றினால் எலி வந்தது கடிக்கும்...

Wednesday, September 28, 2011

கொலு வைப்பது எப்படி? - 08

கொலுப் போட்டிகள்தற்காலத்தில் கொலுப் போட்டிகள் நடப்பது சாதாரணமாகி விட்டது. இதற்கெல்லாமா போட்டிகள் என்று எண்ணினாலும், இந்தப் போட்டிகள் பரபரவென்று ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கொலு போன்ற விஷயங்களில் மேலும் ஆர்வம் கொண்டு பங்கெடுக்க செய்கின்றபடியால் இத்தகைய போட்டிகளை மனமார வரவேற்கலாம். கொலுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்காக ஒரு சிறப்பான கொலு வைத்திருத்தல் அவசியம். தீமாட்டிக் கொலுவாக இருத்தல் இன்னமும் சிறப்பு. கொலுப் போட்டிகள் பல வைகப்படும். பெரும்பாலான போட்டிகளில் கொலு தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே உங்கள் கொலுவை பற்றிய புகைப்படங்கள்...

கொலு வைப்பது எப்படி? - 07

கொலுவுக்கு அழைத்தல்அந்தக் காலத்தில் கொலுவிற்கு நண்வர்களை அழைக்க குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை போன்ற வேடங்களிட்டு அவர்களைப் போய் எல்லோரையும் அழைத்துவிட்டு வரச் சொல்வது வழக்கம். பின்னர் நேரில்  சென்று அழைக்க இயலாதவர்கள் போஸ்ட் கார்டில் நவராத்திரி அழைபிதழ்கள் அனுப்பத் துவங்கினார்கள். அதில் தங்கள் கைவண்ணத்தையும் காண்பிக்க முடிந்தது. அப்புறம் போன் மூலமாகவும் இமெயில் மூலமாகவும் அழைப்புகள் அனுப்புவது வாடிக்கையாயிற்று. தற்போது சோஷியல் மீடியாக்கள் பிரபலமாக, பேஸ்புக், கூகுள் ப்ளஸ் போன்ற மீடியாக்கள் மூலம் அழைக்க முடிகின்றது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள்...

Monday, September 19, 2011

கொலு வைப்பது எப்படி? - 06

தீமாட்டிக் கொலுபல வருடங்களாக ஒரே மாதிரி கொலு வைத்து வந்து அலுப்பு ஏற்பட, புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களின் படைப்புத்தான் தீமாட்டிக் கொலு (Thematic Kolu). அதாவது ஏதேனும் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல பொம்மைகளைத் தேர்வு செய்து அழகுற அதற்கான சூழலை ஏற்படுத்தி வைப்பது தீமாட்டிக் கொலுவாகும். இதில் கொலு வைப்பரின் படைபாற்றல் வெளிப்படுவது மட்டுமின்றி கொலுவினைப் பார்ப்பவர்களுக்கும் நன்கு பொழுது போகும். இன்றைய தினம்...

Thursday, September 15, 2011

கொலு வைப்பது எப்படி? - 05

கொலுவிற்கு மதிப்புக் கூட்டுதல்எவ்வளவு படிகள் கொலு வைத்தாலும், எத்தனை அழகான பொம்மைகளை வாங்கி வைத்தாலும், கொலுவுக்கு மதிப்புக் கூட்டுவது படிகளைச் சுற்றி வைக்கப்படும் பூங்கா, தெப்பக் குளம், மலை போன்ற சமாச்சாரங்கள்தான். ஏனென்றால் இங்குதான் நாம் குடும்பத்திலிருக்கும் அனவரது பங்களைப்பினையும் பெற்றுக் கிரியேட்டிவிட்டி எனப்படும் படைபாற்றலைக் காண்பிக்க இயலும்.  இப்போது இவையனைத்தையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் பூங்கா அமைக்க இடம் இருகின்றதா என்று...

Tuesday, September 13, 2011

அருண் ஷோரி எனக்கு எழுதிய மறுமொழி

அருண் ஷோரி அவர்கள் 1982ஆம் வருடம் மக்ஸாஸே விருது பெற்ற போது அவருக்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் அவருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுத, அவர் என்னையும் மதித்து ஒரு கடிதம் எழுதிருந்தார் என்பதனை முன்பு ஒரு முறை இந்தப் பதிவில் தெரிவித்திருந்தேன். இப்போது சில வாரங்களுக்கு முன்பு  தனது புத்தகத்தை வெளியிட சென்னன வந்திருந்த அவர் 19 வருடங்கள் கழித்து மீண்டும் அதே கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். - சிமுலே...

கொலு வைப்பது எப்படி? - 04

கொலு வைத்தல் இப்போது கொலுப்படி அமைக்க வேண்டிய தருணம். உங்களிடமுள்ள மரப் பெஞ்சுகளையோ, பலகைகளையோ வைத்து கொலுப்படிகள் அமைக்கலாம். அல்லது ஸ்லாட்டட் ஆங்கிளைக் கொண்டு எளிதில் படிகள் அமைக்கலாம். உங்கள் வசதிக்கேற்ப 5,7,9 என்று ஒற்றை படையில் படிகள் அமைக் வேண்டும். கொலுவானது அமாவாசை அன்று வைப்பதுதான் சம்பிரதாயம். ஆனால் அமாவசையன்று கலசம் வைப்பது என்று திட்டமிட்டுக் கொண்டு, மற்ற பொம்மைகளை ஓரிரு நாட்கள் முன்பாகவே வைக்கலாம். படிகள் அமைத்த பின்னர், அதனை மறைக்கும்...

Monday, September 12, 2011

கொலு வைப்பது எப்படி? - 03

முன்னேற்பாடுகள் – கொலு வைக்குமிடம் முதன்முறையாகக் கொலு வைக்க இருப்பவர்கள், கொலு வைக்கும் இடத்தினைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். கொலு கிழக்குப் பார்த்து இருப்பது நல்லது என்றாலும், அபார்ட்மெண்ட்களில் எந்த இடம் வசதியோ அப்படித் தேர்வு செய்து கொள்ளலாம்.  முதலில் இந்த இடத்தையும், இந்த அறையியும், ஜன்னல்களையும்  ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். விருந்தினர்கள் வரும் இந்த அறையிலுள்ள ஃபேன் முதலானவற்றை சோப் பவுடர் கொண்டு சுத்தம் செய்து...

கொலு வைப்பது எப்படி? - 02

முன்னேற்பாடுகள் – வாங்க வேண்டியவைநாம் கொலு வைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்த பிறகு அதற்குத் தேவையான ஏற்பாடுகளை எவ்வளவுக்கெவ்வளவு முன்னதாகக் செய்து கொள்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. எந்த மாதிரி கொலு, எவ்வளவு பெரிய கொலு, எங்கே கொலு வைக்கப் பாகின்றோம் போன்ற விஷயங்களை முன்னதாகவே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இவற்றிக்குத் தேவையான பொருட்கள் என்னென்னவென்றும் பட்டியலிட்டுக் கொண்டு பத்துப் பதினைந்து நாட்கள் முன்பாகவே அவற்றை வாங்கி வைத்துக் கொள்ள...

கொலு வைப்பது எப்படி? - 01

நவராத்திரிப் பண்டிகை நம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைக்களில் ஒன்று. குறிப்பாக இந்தப் பண்டிகை வங்காளம், மைசூர் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மைசூர் போன்ற நகரங்களில் “தசரா” என்ற பெயரில் அரசாங்கத்தின் ஆதரவுடன் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்படும். இந்தப் பண்டிகையின்போது தமிழகத்தில் பலரும் பொம்மைக் கொலு வைப்பது வழக்கம். இதே போல ஜப்பான் நாட்டினரும் பொம்மைகளை வைத்து விழா எடுப்பதாக அறியப்படுகின்றது. நவராத்திரிப்...

Sunday, September 11, 2011

6961 - சுஜாதா - நூல் விமர்சனம்

இன்றைக்குச் சரியாக 50 வருடங்கள் முன்பு கணையாழியில் வெளிவந்த சுஜாதாவின் கதை 6961. அதாவது வெளிவந்த வருடமான 1961ஐத்  தலைகீழாகத் திருப்பிப் போட்டால் வரும் எண் இது. ஆனால் தனது புகழையோ, கணையாழியின் சர்க்குலேஷனைனையோ இந்தக் கதை தலைகீழாகத் திருப்பிப் போடப்போவதில்லை என்ற அபார நம்பிக்கை சுஜாதாவுக்கு.   இந்தக் கதையையும், கல்கி இதழில் வெளிவந்த "ரோஜா" என்ற கதையையும், தினமணிக் கதிரில் வெளிவந்த "ஜோதி" என்ற கதையையும் விசா...

Friday, September 09, 2011

தேவன் நினைவு சொற்பொழிவு - இந்திரா பார்த்தசாரதி - அசோகமித்திரன்

செப்டம்பர் 8ஆம் தேதியன்று சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டலில் 'மெட்ராஸ் புக் க்ளப்'பின் ஆதரவில் நடைபெற்ற "தேவன் அறக்கட்டளை தொடர் சொற்பொழிவின்" முதல் கட்டமாக இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுத்தாளர் தேவன் அவர்களை நினவு கூறும் வண்ணம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும் அசோகமித்திரன் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். ஸ்ருதி இதழின் ஆசிரியர் ராம் நாராயண் முன்னுரை கொடுத்து இவர்களை அறிமுகம் செய்தார். இவற்றின் ஆடியோத் தொகுப்புக்கள் இங்கே:-  ...

Sunday, September 04, 2011

வண்ணநிலவனும் திராவிட மாயையும்

http://simulationpadaippugal.blogspot.com/2011/02/blog-post_19.html "நகர்ந்து செல்லும் நாட்கள்" என்ற தலைப்பில் கல்கி வார இதழில் 'வண்ணநிலவன்' அவர்கள் கடந்த 6 இதழ்களாக பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகின்றார். இந்த இதழில் 'சுப்பு' அவர்களின் "திராவிட மாயை" என்ற புத்தகம் பற்றி எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் குறித்த எனது ஆயாசத்தினை இந்தப் பதிவில் தெரிவிதிருந்தேன். வண்ணநிலவன் கருத்துக்களும் இதையே சுட்டுகின்றது. - சிமுலே...