Thursday, December 29, 2011

சீசன் சபேசன்

"ஹலோ ரவி, எப்படியிருகே" குரல் கேட்டுத் திரும்பினேன். கேட்ட குரல் சபேசனுடையது. சபேசன் கிராமத்தில் எனது பள்ளி நண்பன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கல்லூரிக்குச் செல்ல வசதி இல்லாததால் அத்துடன் படிப்ப நிறுத்திக் கொண்டவன். கல்லூரிப் படிப்பு முடித்தவர்களுக்கே வேலை கிடைப்பது திண்டாட்டமாக இருக்கும் போது இவன் என்ன செய்யப் போகின்றான் என்று நான் கவலைப்பட்டதுண்டு. "டேய் சபேசா. நான் சென்னையில்தான் வேலையாக இருக்கேன். நீ எப்ப சேன்னைக்கு வந்தே? இப்ப என்ன பண்றே?" "ரவி. நம்ம கிராமம்தான் தெரியுமே. அங்க பிழைக்க பெரிசா வழி ஒண்ணும் இல்லே. அதனால இங்கே வந்துட்டேன்....

Monday, November 14, 2011

Tuesday, November 01, 2011

வாடிக்கையாளரே ராஜா

“என்னங்க, வண்டியை அந்தக் கடையாண்டை நிறுத்துச் சொன்னா, இங்கே வந்து நிறுத்தறீங்க” ஆள்வார்ப்பேட்டையிலிருந்த சற்றே சிறிய கண்ணாடிக்கடையினை விட்டுக் கொஞ்சம் தள்ளி வந்து, ஒரு பெரிய கடையின் முன்னால் பைக்கை நிறுத்தினான் ராஜேஷ். “வா. ரம்யா. இந்தக் கடைக்கே போகலாம்” “எதுக்குங்க. அந்தக் கடையிலும் ஏற்கெனவே ஒரு முறை கண்ணாடி வாங்கியிருகோம். இந்தக் கடையிலேயும் வாங்கியிருகோம். ஆனா, அந்தக் கடையிலே இருநூறு ரூபாய்  கொறச்சுக் கொடுத்தாங்க. அப்புறம் காபி, கூல் ட்ரிங்ஸ் எல்லாம் கூடக் கொடுத்தாங்க. அதை விட்டுட்டு இங்க ஏன் வந்தீங்க?” “ரம்யா. போனமுறை அந்தக் கடைக்குப்...

தேவையா மொபைல்

சுரேஷ், பாரதி பூங்காவில் பத்தாவது சுற்றுச் சுற்றிக் கொண்டிருந்த போதும், அந்தக் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தவன் மொபைலில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அழுக்கான ஒரு டி-ஷர்ட். அரை நிஜார் தெரிய ஒரு லுங்கி.  ஐந்து நாட்களுக்கும் மேலே ஆகியிருக்கும் அவன் குளித்து. வறுமைக்கோட்டைத் தாண்டி வர, அவனுக்குப் பல வருடங்களாகலாம். இப்படிப்பட்ட ஒருவன் மொபல் போனில் அரை மணி நேரத்திற்கு மேலாகப் பேசிக் கொண்டிருப்பது சுரேஷுக்கு ஆச்சரியத்தையும் மட்டுமல்ல, எரிச்சலையும்கூடத் தந்தது. இந்த மாதிரி அவன் பேசிக் கொண்டிருந்தால், நிச்சயம் மாசம் ஆயிரம் ருபாய்க்குக் குறைவாக ...

Sunday, October 30, 2011

பசு வதைத் தடுப்பும் துக்ளக்கும்

- சிமுலே...

கடுப்படித்த துக்ளக்கும் கலங்கிய சிதம்பரமும்-01

சிதம்பரம் அவர்களைக் கடுப்படிக்கும் வகையில் 19.10.2011 இதழ் துக்ளக்கில் வெளியான கேள்வி-பதில்தான் என்ன?  மேலும் 27 மற்றும் 35ஆம் பக்கங்களில் வெளியான கேலிச் சித்திரங்கள்தான் என்னென்ன? அடுத்த பதிவில். - சிமுலே...

Friday, October 21, 2011

முழு முகவரியும் இல்லாட்டா இவங்களுக்குத் தபாலே போய்ச் சேராதா?

முழு முகவரியும் இல்லாட்டா இவங்களுக்குத் தபாலே போய்ச் சேராதா? அப்புறம் ஏன் இந்தக் கொல வெறி? Infosys Limited Plot No: TP 1/1 Central Avenue Techno Park SEZ Mahindra world city Natham sub post Chengalput - 603 002 Infosys LimitedSpecial Economic Zone Survey Nos. 50 (part), 51, 54, 49, 48, 44 & 45 (part), 41 (part), 36 (part) Pocharam Village Singapore Township Post Office Ghatkesar Mandal, Ranga Reddy (Dist) Hyderabad - 500 088 Tata Consultancy Services Unit No. 801, 901 & 1001 A-Wing Kensington Building IT/TES/SEZ Hiranandani Business Park Powai,...

Monday, October 17, 2011

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 08 - ப்ருந்தாவன சாரங்கா

22ஆவது மேஎளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகங்களில் ஒன்று ப்ருந்தாவனா சாரங்கா. தேசீய ராகங்களிலும் ஒன்றான இந்த ராக்கம் மயக்கம் தரவல்ல ராகம் என்றால் மிகையாகாது. பக்தி ரசமும் இந்த ராகத்தில் சொட்டுவதனால் பஜன் மற்றும் ஸ்லோகங்கள் பாட இசைந்த ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:- ஆரோகணம்: ஸ் ரி1 ம1 ப் நி3 ஸ் அவரோகணம்: ஸ் நி2 ம1 ரி2 ஸ் இது பிரபலமான் ராகமான மத்யமாவதி போல இருக்கும். ஆனால் ஆரோகணத்தில் கசிக நிஷாததிற்குப் பதிலாக காகலி நிஷாதம் வரும். அதுவே மத்தியமாவதிக்கும் ப்ருந்தாவன சாரங்காவிற்கும் உள்ள வித்தியாசம். வட இந்திய இசையில் உள்ள ப்ருந்த்தாவனி...

கணையாழி கடைசிப் பக்கங்களும் தமிழ்ப் பதிவர்களும்

ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் வாசகர்களுடன் சுவாரசியமாகப் பகிர்ந்து கொள்வது சுஜாதாவுக்குக் கை வந்த கலை. ஆனால் அந்த விஷயம் ரொம்பச் சின்ன விஷயமாக இருந்தால் அதே போல பல விஷயங்களை ஒரே குடையின் கீழ் தொகுத்து எழுதி வந்தார். அதுதான் கணையாழி கடைசிப் பக்கங்கள். இதில் என்ன வசதி என்றால் இதுதான் எழுத வேண்டும் என்ற எந்த விதக் கட்டாயமும் இல்லாமல் மனதுக்குத் தோன்றிய விஷயங்களை எல்லாம் ஒரு கதம்பமாகத் தொகுத்து வழங்கலாம். ஒரு விஷயத்துக்கும் அடுத்த விஷயத்துக்கும் சம்பந்தம் இருக்கத் தேவையில்லை. சொல்லுவது மட்டும் சுவாரசியமாக இருக்க வேண்டும். இந்த 'கணையாழி...

Sunday, October 16, 2011

மெரினா - சுஜாதா - நூல் விமர்சனம்

சென்னை மெரினா கடற்கரையில் ஒரு இரவில் நடக்கும் சம்பவம்தான் கதைக்கான களம். நூற்றுச் சில பக்கங்கள் கொண்டது சுஜாதாவின் மெரினா என்ற இந்தக் குறுநாவல். குங்குமம் இதழில் தொடராக வெளிவந்தது. கதையின் முடிச்சு பலமானது அல்லதான். இருந்தாலும் தனது விறுவிறுப்பான நடையால் கட்டிப் போடுகின்றார் சுஜாதா. அதிலும் குறிப்பாக முதல் சில அத்தியாயங்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. ஒரு புறம் ந்டுத்தரக் குடும்பத்தினர்களும், குழந்தைகளும் குதூகலமாக விளயாடிக் கொண்டிருக்கும் மெரினா...

Wednesday, October 12, 2011

கோயம்புத்தூர்வாசிகளுக்கு டோஸ்ட்மாஸ்டர்ஸ்ஸில் சேர ஒரு வாய்ப்பு

பேச்சுக் கலை (ஆங்கிலத்தில்) மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் டோஸ்ட் மாஸ்டர்ஸ் க்ளப் பற்றி முன்பு ஒரு முறை எனது இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பதிவினைப் படித்து விட்டு ரமேஷ் என்ற தமிழ் வலைப்பதிவர் என்னைத் தொடர்பு கொண்டு 'மெட்ராஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் க்ளப்பில்' உறுப்பினராகி, உற்சாகமாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.   சென்னையில் மட்டுமே 25க்கும் மேற்பட்ட க்ளப்புகள் கொண்ட டோஸ்ட்மாஸ்டர்ஸ் அமைப்பு இப்போது தமிழ்நாட்டில் தூத்துக்குடி...

Sunday, October 09, 2011

மாணவர்களுக்கான இலவச மடிக்கணிணி - மேம்பட்ட பயன்பாட்டிற்கு மேலான சில யோசனைகள்

09.10.11 திருமதி. சபீதா. இ.ஆ.பசெயலர் பள்ளிக் கல்வி இயக்ககம்தமிழ்நாடு அரசுசென்னை மதிப்பிற்குரிய கல்வித் துறை செயலருக்கு, பொருள்: மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலவச மடிக் கணிணியினை சிறப்பாகப் பயன்படுத்த சில யோசனைகள் இலவச மடிக்கணிணியினைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள மகிழ்திருக்கும் இந்த வேளையில், சமூக ஆர்வலர்கள் பலர் இந்த மடிக்கணிணிகள் முறையாகப் பயன்படுத்தப்படுமா என்று கவலை தெரிவித்துள்ளனர்கள். இவை முறையாகப் பயன்படுத்தப்படாமல் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்படுமோ என்று அச்சமும் தெரிவித்துள்ளனர். தேவைற்ற இணைய தளங்களை அணுகுவது தடுக்கப்பட்டும், மடிக்கணிணியில்...

Friday, October 07, 2011

இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை - மீள்பதிவு

(தீபாவளித் திருநாளன்று திருநெல்வேலி - படம் உதவி - விக்கிபீடியா)மற்ற எந்த இந்துப் பண்டிகைகளுக்கும் இல்லாத பல விசேஷங்கள் தீபாவளித் திருநாளுக்கு உண்டு. அவை என்னவென்றால்: குழந்தைகளையும், பெரியவர்களையும் பரவசப்படுத்தும் பட்டாசுகளும், மத்தாப்புக்களும் தீபாவளிக்குப் பலநாடகள் முன்பிருந்தே வெடிக்கப்படும். நான்கைந்து நாட்கள் முன்பாகவே, இனிப்பு, காரம் உள்ளிட்ட பட்சணங்களும், பலகாரங்களும் செய்யப்படும். மற்ற பண்டிகைகள் போல பண்டிகை தினம் நைவேத்யம் செய்துவிட்டுத்தான்...

எங்க வீட்டு கொலு - 2011

- சிமுலே...

Thursday, September 29, 2011

கொலு வைப்பது எப்படி?

கடந்த சில நாட்களில் நவராத்திரி கொலு குறித்து ஒன்பது பதிவுகள் இட்டிருந்தேன். அதனைப பற்றிய ஒரு சுருக்கம் இங்கே. முதல் பதிவில் கொலு குறித்த ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்டது. இரண்டாவது பதிவில் கொலுவுக்கு முன்னதாக வாங்க வேண்டியவை குறித்து விளக்கப்ட்டது. மூன்றாம் பதிவில் கொலு வைக்கும் அறையில் செய்ய வேண்டியவைகள் குறித்தும் மற்றைய ஏற்பாடுகள் குறித்தும் கூறப்பட்டது. நான்காம் பதிவில் படி கட்டிக் கொலு வைக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. ஐந்தாம் பதிவில் கொலுவில் பூங்கா, தெப்பக் குளம் போன்றவை செய்து எப்படி மதிப்புக் கூட்டுவது என்று கூறப்பட்டது. ஆறாம்...

கொலு வைப்பது எப்படி? - 09

கொலு முடிந்தவுடன் செய்ய வேண்டியவைகொலு முடிவடைந்த மறுநாளே எல்லாப் பொம்மைகளையும் எடுத்து விடாமல் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்தால் நமக்கும் ஓய்வு கிட்டும். நவராத்திரியின் போது வர முடியாத சில விருந்தினர்களும் வந்து பார்க்க வசதியாக இருக்கும். எடுத்து வைக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடுத்த முறை எளிதாக கொலு வைக்க முடியும்.  அதாவது பொம்மைகளை மண் பொம்மை, பீங்கான பொம்மை, பேப்பர் மேஷ் என்று ரகம் வாரியாகப் பிரித்து வத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பழைய நாளிதழ்கள் கொண்டு கவனமாகச் சுற்ற வேண்டும். துணியால சுற்றினால் எலி வந்தது கடிக்கும்...

கொலு வைப்பது எப்படி? - 09

கொலு முடிந்தவுடன் செய்ய வேண்டியவைகொலு முடிவடைந்த மறுநாளே எல்லாப் பொம்மைகளையும் எடுத்து விடாமல் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்தால் நமக்கும் ஓய்வு கிட்டும். நவராத்திரியின் போது வர முடியாத சில விருந்தினர்களும் வந்து பார்க்க வசதியாக இருக்கும். எடுத்து வைக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடுத்த முறை எளிதாக கொலு வைக்க முடியும்.  அதாவது பொம்மைகளை மண் பொம்மை, பீங்கான பொம்மை, பேப்பர் மேஷ் என்று ரகம் வாரியாகப் பிரித்து வத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பழைய நாளிதழ்கள் கொண்டு கவனமாகச் சுற்ற வேண்டும். துணியால சுற்றினால் எலி வந்தது கடிக்கும்...

Wednesday, September 28, 2011

கொலு வைப்பது எப்படி? - 08

கொலுப் போட்டிகள்தற்காலத்தில் கொலுப் போட்டிகள் நடப்பது சாதாரணமாகி விட்டது. இதற்கெல்லாமா போட்டிகள் என்று எண்ணினாலும், இந்தப் போட்டிகள் பரபரவென்று ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கொலு போன்ற விஷயங்களில் மேலும் ஆர்வம் கொண்டு பங்கெடுக்க செய்கின்றபடியால் இத்தகைய போட்டிகளை மனமார வரவேற்கலாம். கொலுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்காக ஒரு சிறப்பான கொலு வைத்திருத்தல் அவசியம். தீமாட்டிக் கொலுவாக இருத்தல் இன்னமும் சிறப்பு. கொலுப் போட்டிகள் பல வைகப்படும். பெரும்பாலான போட்டிகளில் கொலு தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே உங்கள் கொலுவை பற்றிய புகைப்படங்கள்...